பட்ஜெட் 2022-23 : நாங்கள் சிறப்பானதற்கு தகுதியானவர்கள்

>> Read this statement in English | Hindi

எட்டு ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கம் “அனைவருக்கும் வளர்ச்சி” (சப் கா சாத், சப் கா விகாஸ்) உறுதியளித்தது, இது நமது சுதந்திரத்தின் 75 வது ஆண்டு கொண்டாட்டத்தின் பிரம்மாண்டமான மூன்று ஆண்டு கால கொண்டாட்டத்தில் முடிவடையும். 2022-23 பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது கொண்டாட்டத்தை அரசாங்கம் ரத்து செய்து, அடுத்த 25 ஆண்டுகளுக்கு ‘கடினமாக பாடுபடுங்கள்’ (முயற்சி செய்தல்) என அனைவரையும் அழைப்பதன் மூலம் வளர்ச்சியின் சுமையை மக்கள் மீது சுமத்தியது. நமது சுதந்திரத்தின் 100வது ஆண்டில் பொற்காலத்தை கொண்டாடலாம் என்றது. வளர்ச்சிக்கான அனைத்து உலகளாவிய குறியீடுகளிலும் இந்தியாவை அடிமட்டத்திற்கு இட்டுச் செல்வதில் முக்கிய பங்காற்றும் அரசாங்கம் பற்றி ஆச்சரியப்படுவதற்கு ஏதும் இல்லை. நீடித்த வளர்ச்சி அறிக்கை (2021) தரவரிசையின்படி 167 நாடுகளில் இந்தியா 120 வது இடத்தில் உள்ளது. பிறப்பு, வாழ்க்கைத் தரம் அடிப்படையாக கொண்ட மனித வளர்ச்சி அறிக்கையின் (2020) படி நாங்கள் 189 நாடுகளில் 131 ஆவது இடத்தில் உள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டின் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில் 156 நாடுகளில் 140 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

பட்ஜெட் – இதில் நமக்கு என்ன இருக்கின்றது?

பாஜகவின் மதவாத தேசியவாத போதையில் இருப்போம் என்ற எண்ணத்தில், கடந்த காலத்தில் வாக்குறுதியளித்ததை மறந்துவிட்டு, நிகழ்காலம் என்ன என்பதை மறந்துவிட்டு, எதிர்காலத்திற்கான சாத்தியங்களால் சிறைபட்டு கொண்டே இருப்போம் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில், இந்த பட்ஜெட் வெறும் வார்த்தை ஜாலமாக உள்ளது.

நம் நாடும், முழு உலகமும் இன்னும் தொற்றுநோயுடன் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், 2022 ஆம் ஆண்டு ஜனவரி 2022 30 ஆம் தேதி நிலவரப்படி, நமது மக்கள்தொகையில் 51% பேர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர் (WHO). பாஜகவிற்கு இந்த தொற்றுநோய் கடந்த காலத்தின் ஒரு விஷயமாகிவிட்டது. நாம் இப்போது ஒரு வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருக்கிறோம், எனவே மக்கள் மீதான செலவினங்களைக் குறைக்க வேண்டிய நேரம் இது என்று நம்ப வேண்டும் என்று இப்போது அது விரும்புகிறது. முதலில் சமூகப் பாதுகாப்பிற்கான செலவை குறைத்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டில், உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது விநியோகத்திற்கான செலவினங்களை 28% ஆகவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக உத்தரவாதச் சட்டத்தில் (MNREGA) 26% ஆகவும் குறைக்க பட்ஜெட் திட்டமிட்டுள்ளது.

பணவீக்கம், விரிவாக்கம் அல்லது திட்டங்களின் மேம்பாடு ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல் அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகளின் மதிய உணவுக்கான செலவுகள் மாறாமல் அப்படியே இருக்கின்றன. கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயத்திற்கான செலவினங்களும் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், அரசாங்கம், தனது காவிமயமாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையை (NEP) அமல்படுத்துவதை உறுதிசெய்ய கல்வி வரவு செலவுத் திட்டங்களில் ஒரு சிறிய அதிகரிப்பு உள்ளது.

மிகவும் வியக்கத்தக்க வகையில், தொற்றுநோயின் மூன்றாவது அலைக்கு மத்தியில், பிஜேபி அரசாங்கம் சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீட்டை ரூ. 75,000 கோடியிலிருந்து ரூ. 41,000 கோடியாக (45%) குறைத்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசி பட்ஜெட் ரூ.39,000 கோடியில் இருந்து 5,000 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் முழுமையாக தடுப்பூசி போட காத்திருக்கிறார்கள், குறிப்பாக நம் குழந்தைகள். இந்த பட்ஜெட் குறைப்பு, இந்த கொடிய நோயிலிருந்து நம்மையும் நம் குழந்தைகளையும் பாதுகாக்க தயாராக இல்லை என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறதா?

அரசாங்கம் எப்படி பணம் திரட்டும்?

மகாபாரதத்தை மேற்கோள் காட்டி, வரி வசூலித்து, மக்களின் நலனுக்காக பாடுபடுவதுதான் அரசின் பணி என்று பட்ஜெட் கூறுகிறது. பணக்காரர்களை காட்டிலும் உழைக்கும் வர்க்கம், ஏழைகள் என அனைவருக்கும் வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) இந்த புராணச் சொல்லாடல்களைப் பயன்படுத்தி அரசு கொண்டாடுகிறது. இது அனைத்து அடிப்படைத் தேவைகளுக்குமான வரி. இது மருந்துகளுக்கான வரி. ஒரு கப் டீக்குக் கூட வரிதான். மேலும், வரவுசெலவுத் திட்டத்தில் கலப்படமற்ற பெட்ரோலுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது, இது தொழிலாளர்களின் அனைத்துப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். ஆனால் நிறுவனங்களுக்கு வரி விதிக்கும் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர், “பிரதமர் மோடியின் அறிவுறுத்தல்கள் மிகவும் தெளிவாக இருந்தன ‘கூடுதல் வரிகள் இல்லை‘ ‘” என்றார்- அது வெளிப்படையாக பணக்காரர்களுக்கு.

ஏழைகளுக்கு வரி விதிப்பதால் போதிய வரியை உயர்த்த முடியாது என்பதை பாஜக அரசு அறிந்திருப்பதால், செலவு செய்வதற்காக கடன் வாங்க திட்டமிட்டுள்ளது. 2023ல், அரசு கடன் வாங்குவது 2019ல் இருந்ததைவிட, இருமடங்காக இருக்கும். அரசாங்கம் வாங்கும் ஒவ்வொரு 3 ரூபாயில் 1 ரூபாய் சிறு சேமிப்பில் இருந்து கிடைக்கும். எனவே ஏழை மற்றும் சாதாரண உழைக்கும் மக்கள் சமூகப் பாதுகாப்பிற்கான குறைந்த செலவினங்களை நிதி ஒழுக்கத்தை மட்டும் சுமக்க மாட்டார்கள், அவர்கள் அதிக மறைமுக வரிகளையும் செலுத்துவார்கள், மேலும் அவர்களின் முதுகில் பிஜேபி அரசாங்கம் ‘தற்சார்பாக மாற்றுவதற்கு,( ஆத்மநிர்பர்) நாட்டை கடனாக்கும்.

நிச்சயமாக அரசாங்க செலவினங்கள்க்காக, பொதுச் சொத்துக்களின் தனியார்மயமாக்கல் மற்றும் ‘பணமாக்கல்’ ஆகியவற்றின் வருமானத்தில் இருந்து இருக்கும். தனியார் துறைக்காக, முந்தைய ஒவ்வொரு அரசாங்கத்தையும் விட அதிகமாக பாஜக செய்திருக்கிறது. ஏர் இந்தியாவிடமிருந்து நாம் கற்றுக்கொண்டது போல், பாஜக அரசு பொதுத்துறையை அற்ப விலைக்கு மாற்றிவிடும். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது,பட்ஜெட்டில் தனியார்மயமாக்கல் மீதான எதிர்பார்ப்புகள் குறைந்துள்ளது.

ராஜா சக்திவாய்ந்தவர் அல்ல

2016-17 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் தனியார் முதலீடு குறைந்து வருகிறது, தேவை தொடர்பாக பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது, அதனை வேறுவிதமாக சொல்வதாக இருந்தால் நுகர்வு. 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பணமதிப்பிழப்பால், வேலைகள் மற்றும் வருவாய்க்கான சிக்கல் ஏற்பட்டது. அதன்பின்னர், பொருளாதாரம் நிரந்தரமான சரிவைச் சந்தித்து வருகிறது, குறைந்த தேவை மற்றும் குறைந்த முதலீடு காரணமாக வேலை இழப்பு மற்றும் ஊதியம் குறைகிறது. போதுமான திட்டமிடல் மற்றும் முன்தயாரிப்பு இல்லாமல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதால், இது தொடர்ந்தது. தனியார் துறையின் மீதான குறைந்த வரிகள் அதிக முதலீட்டுக்கு வழிவகுக்கும் என்ற தவறான கருத்தியல் புரிதலில், பிஜேபி அரசாங்கம் செப்டம்பர் 2019 இல் நிறுவனங்களின் மீதான வரிகளை 8-10% வரை குறைத்தது. இந்த குறிப்பிடத்தக்க வருவாய் இழப்பு அரசாங்கத்தின் செலவினத் திறனை மேலும் குறைத்து, மேலும் கடன் வாங்க தூண்டியது. தேவை அதிகரிக்கும் முக்கிய பகுதிகளில் அரசாங்க செலவினங்களையும் குறைக்கிறது. இவ்வாறு, பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்பே, நமது நாடு ஏற்கனவே குறைந்த தேவை, குறைந்த முதலீடு, குறைந்த வேலைவாய்ப்பு மற்றும் குறைந்த ஊதியம் போன்ற பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருந்தது. பெருந்தொற்று நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

முன்னெப்போதையும் விட அதிகமான பணத்தை மூலதனச் செலவினங்களுக்காக செலவிடுவதை பட்ஜெட் இலக்காகக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டை விட 2022-23ல் இது கிட்டத்தட்ட 35% அதிகரிக்கப்பட்டுள்ளது மேலும் இது பெரும்பாலும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக இருக்கும். தனியார் துறையை முதலீடு செய்ய ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்று அரசு கூறுகிறது. ஏறக்குறைய எட்டு ஆண்டுகளாக எல்லா வகையிலும் முதலாளித்துவ வர்க்கத்திற்காக பணியாற்றிய அரசு சிக்கலில் உள்ளது. தொழிலாளர்களின் உரிமைகளுக்காக வேலைநிறுத்தம் செய்வதை பாஜக அரசாங்கம் தடை செய்ய விரும்பினாலும், தொழில், உற்பத்தி, அடிப்படை சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு எதிரான வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற பணக்காரர்களையும் பெரிய நிறுவனங்களையும் அறிவுறுத்துவதற்கு அதிகாரம் இல்லை. எனவே ஏழைகளின் செலவில் பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாக வளர பொது-தனியார் கூட்டாண்மை மூலம் முதலீடு செய்ய அரசாங்கம் அவர்களை கவர்ந்திழுக்கிறது.

2021-22 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிக்கை மற்றும் பொருளாதார ஆய்வு ஆகிய இரண்டும் அரசாங்கத்திடம் இருந்து கொள்கை குறித்த கண்ணோட்டம் இல்லாததைக் காட்டுகின்றன. வரவிருக்கும் ஆண்டில் பொருளாதாரம் 8-9% வரை வளரும் என்று அரசாங்கம் கூறுகிறது, ஆனால் பொருளாதாரத்தை அப்படி உயர்த்துவதற்கான வழி ஏதும் இல்லை. தேவையை அதிகரித்து ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் உயர்த்தும் வேலை வாய்ப்புகளுக்காக அரசு செயல்படுவதற்கான திட்டம் எதுவும் இல்லாத நிலையில், வெறும் எண்களையும் வார்த்தை ஜாலங்கள் நாட்டை முன்னேற்றும் என்று பாஜக அரசு நம்புகிறது. பிஜேபி அரசாங்கம் இந்தியாவை உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்று கூறுகிறது, ஆனால் அதிக பணவீக்கத்துடன் கூடிய உயர் வளர்ச்சி என்பது உண்மையான அதிக வளர்ச்சி இல்லை என்பதை சொல்லவில்லை.

இதுவரை இல்லாத அளவுக்கு அந்நியச் செலாவணி கையிருப்பு நம்மிடம் இருப்பதாக பாஜக அரசு கூறுகிறது. நாம் பெருமளவில் இறக்குமதி செய்யும் பெட்ரோலியத்தின் விலை உயர்வதால், மற்ற இறக்குமதிகளும் உயரும் போது, கையிருப்பு, எவ்வளவு அதிகமாக இருந்தாலும், நீண்ட காலம் நீடிக்காது. அரசாங்கத்தின் தற்சாரொய் என்ற வாய்ஜாலம், மற்றும் சீனாவிற்கு எதிரான சிந்தனையற்ற தேசியவாத ஜம்பம், நடுத்தர மற்றும் சிறு தொழில்கள், குறிப்பாக உற்பத்தி, வேலைகள், வாழ்வாதாரங்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தி திறன்கள் மற்றும் திறன்களை அழிக்கும் வகையில் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் சீனாவில் இருந்து நமது இறக்குமதி மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. தற்சார்பு என்பதில் இருந்து நாம் எவ்வளவு தூரம் நகர்ந்திருக்கிறோம்.

இன்று மூன்று உடனடி கவலைகள் மட்டுமே இருக்க முடியும் – புதிய திரிபுகளின் தாக்கம் அல்லது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது, வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல் மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் பணவீக்கத்தை பராமரித்தல் என்பதாக உள்ளது. வைரஸைப் பற்றி, கடந்தகால சாதனைகளை மட்டுமே பட்ஜெட் பேசுகிறது ஆனால் எதிர்காலத்திற்கான எந்த ஏற்பாடுகளையும் பற்றி பேசவில்லை. நாடு முன்னேற 20 கோடி வேலைவாய்ப்புக்கள் தேவை என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், வேலைகள் நெருக்கடியைக் கையாள்வது குறித்து பட்ஜெட்டில் தெளிவான திட்டமோ, அம்சங்களோ இல்லை. விலைவாசி பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில், பட்ஜெட் மௌனமாகவே உள்ளது.

இறுதியாக, இவை அனைத்தின் அடிப்படையிலும், நம் நாட்டில் தோன்றியிருக்கும் அருவெருக்கதக்க சமத்துவமின்மையின் மிக ஆழமான நெருக்கடி. இன்று 100 பணக்கார இந்தியர்கள் கிட்டத்தட்ட 55 கோடி மக்கள் அல்லது 45 சதவிகித மக்களுடைய செல்வத்திற்கு சமமான செல்வத்தை வைத்துள்ளனர். பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து நாட்டில் 84 சதவீத குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் சரிவை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. நமது வரிகளின் அமைப்பு, இதை மேலும் மோசமாக்கும். தொடர்ந்து மந்தமான தேவை, வேலையிழப்பு, ஊதியம் குறைதல் மற்றும் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும். நமது நாட்டில் பெருகிவரும் அல்லலிற்கு பாஜக அரசு பங்களித்து வருகிறது.

நாங்கள் சிறப்பானதற்கு தகுதியானவர்கள். தொழிலாளர் வர்க்கம், பாஜக அரசாங்கத்திற்கு எதிராக தீவிர எதிர்ப்பை வலிமைப்படுத்த வேண்டும்.